மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற விவசாயி சிறையில் அடைப்பு
மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற விவசாயி சிறையில் அடைக்கப்பட்டார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பூலாம்பாடி பஜனை மடத் தெருவை சேர்ந்தவர் காமராஜ் (வயது 47). விவசாயி. இவரது மனைவி சுதா(40). கருத்து, வேறுபாடு காரணமாக சுதா தனது கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். மேலும் சுதா தனது கணவரிடம் இருந்து விவாகரத்து, ஜீவனாம்சம் கேட்டு கடந்த 2020-ம் ஆண்டு பெரம்பலூர் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந் தேதி பெரம்பலூர் நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணைக்காக ஆஜராக அரசு டவுன் பஸ்சில் வந்து இறங்கிய சுதாவை மறைந்து இருந்த அவருடைய கணவர் காமராஜ் ஓடி வந்து கத்தியால் குத்திகொலை செய்ய முயன்றார். இதனை தடுத்த போலீஸ்காரர் அழகேசனுக்கு(29) வலது கையில் கத்திக்குத்து விழுந்தது. மேலும் காமராஜூக்கும் இடது கையில் கத்தி குத்தியது. இதில் 3 பேரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிந்து காமராஜை நேற்று முன்தினம் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.