முந்திரி தோட்டத்தில் அழுகிய நிலையில் பெண் பிணம்
முந்திரி தோட்டத்தில் அழுகிய நிலையில் பெண் பிணம் கிடந்தது.;
செந்துறை
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி கிராமத்தில் உள்ள முந்திரி தோட்டத்தில் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கிடந்தது. இதனை அப்பகுதியில் முந்திரி கொட்டை பறிக்க சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.