மொபட்டுகள் மோதல் தொழிலாளி சாவு

பள்ளிபாளையம் அருகே மொபட்டுகள் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-05-03 17:01 GMT
பள்ளிபாளையம்:-
பள்ளிபாளையத்தை அடுத்த பட்லூரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 33). விவசாய கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை இறையமங்கலத்தில் இருந்து தனது மொபட்டில் பட்லூரை நோக்கி சென்று கொண்டிருந்தார். வெள்ளியம்பாளையம் பிரிவு பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த இன்னொரு மொபட்டும், லோகநாதன் சென்ற மொபட்டும் மோதிக்கொண்டன. இதில் பலத்த காயம் அடைந்த லோகநாதன் சம்பவ இடத்திலேயே பலியானார். இன்னொரு மொபட்டில் வந்த மனோகரன் (35) என்பவர் படுகாயம் அடைந்தார். காயம் அடைந்த அவர், திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து மொளசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த லோகநாதனுக்கு, புனிதா என்ற மனைவியும், 2 வயதில் மகனும் உள்ளனர்.

மேலும் செய்திகள்