மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார்.

Update: 2022-05-03 17:00 GMT
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள பி.மோட்டுபட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 50). விவசாயியான இவர் நேற்று மாலை அருகே உள்ள கூட்டுறவு சங்கத்திற்கு பாலை எடுத்து சென்றார். அப்போது சூறைக்காற்று வீசியது. இதனால் சாலையோரத்தில் அறுந்து விழுந்த மின்சார கம்பி எதிர்பாராத விதமாக அவர் மீது பட்டதாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்தார். இதுபற்றி கிருஷ்ணாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்