புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது
புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.
சாயல்குடி,
சாயல்குடி பகுதியில் புகையிலை மற்றும் குட்கா பதுக்கி வைத்து இருப்பதாக வந்த ரகசிய தகவலின் பேரில் சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் சாயல்குடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை யிட்டனர். அங்கு முதுகுளத்தூரை சேர்ந்த வையாபுரி மகன் பாலசஞ்சய்காந்தி (வயது45) என்பவர் வாடகைக்கு தங்கி இருந்த வீட்டில் புகையிலை மற்றும் குட்கா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சாயல்குடி போலீசார் அவரை கைது செய்து 20 கிலோ புகையிலை மற்றும் குட்காவை பறிமுதல் செய்தனர்.