மயிலாடுதுறையில், இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
ரம்ஜான் பண்டிகையையொட்டி மயிலாடுதுறையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை:-
மயிலாடுதுறை மாவட்ட பகுதியில் நேற்று இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. இந்த தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர். அப்போது உலகில் அன்பும், அறமும், மனிதநேயமும் தழைத்தோங்கவும், ஒற்றுமையுடன் வாழவும், சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். இதேபோல் மயிலாடுதுறை அருகே உள்ள நீடூர், வடகரை, கிளியனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சிறப்பு தொழுகை நடந்தது.