தியாகதுருகம் அருகே கார் மோதி விவசாயி சாவு

தியாகதுருகம் அருகே கார் மோதி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-05-03 16:57 GMT
கண்டாச்சிமங்கலம், 

தியாகதுருகம் அருகே மடம் புது காலனி பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது 55),  விவசாயி. இவர் நேற்று காலை கள்ளக்குறிச்சியில் இருந்து மொபட்டில் வீட்டுக்கு புறப்பட்டார். தியாகதுருகம் அடுத்த வீரசோழபுரம் பிரிவு சாலையை கடக்க முயன்றபோது, பின்னால் வந்த கார் மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முத்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்