கெலமங்கலம் அருகே உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகள் போலீசில் ஒப்படைப்பு

கெலமங்கலம் அருகே உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகள் போலீசில் ஒப்படைக்கப்பட்டன.;

Update: 2022-05-03 16:52 GMT
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள போடிச்சிப்பள்ளி, ஜக்கேரி ஆகிய ஊராட்சி பகுதியில் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் அவற்றை ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆஞ்சி, ராஜேஷ்குமார் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்கள் அந்த 2 நாட்டுத்துப்பாக்கிகளையும் கெலமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபனிடம் ஒப்படைத்தனர். மேலும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

மேலும் செய்திகள்