நாட்டு கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் வராமல் தடுப்பது எப்படி
நாட்டு கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் வராமல் தடுப்பது எப்படி? என்பது குறித்து வானிலை ஆராய்ச்சி நிலையம் விளக்கம் அளித்துள்ளது.
நாமக்கல்:-
நாட்டு கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் வராமல் தடுப்பது எப்படி? என்பது குறித்து வானிலை ஆராய்ச்சி நிலையம் விளக்கம் அளித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்றும், நாளைமறுநாளும் (வெள்ளிக்கிழமை) தலா 4 மி.மீட்டரும், நாளை (வியாழக்கிழமை) 8 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்று மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் தென்மேற்கு திசையில் இருந்து வீசும். வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 104 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 73.4 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 80 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 35 சதவீதமாகவும் இருக்கும்.
தடுப்பூசி
சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் தற்போது நிலவும் வானிலையில் கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த நோயின் அறிகுறிகள் கோழிகள் தலையை ஒரு பக்கமாக சாய்த்து கொள்ளுதல், கழிச்சல் மற்றும் முட்டைகளின் எண்ணிக்கை குறைந்து இறப்பு ஏற்படும். பொதுவாக நாட்டுக்கோழி வளர்ப்பு விவசாயிகள் வெள்ளை கழிச்சல் நோய்க்கு எதிராக கோழிகளுக்கு தடுப்பூசி அளிக்க வேண்டும்.
மேலும் வெள்ளை கழிச்சல் நோய் நாட்டுக்கோழிகளுக்கு வராமல் தடுக்க தடுப்பூசியுடன் கோழிகளுக்கு மூலிகை மருத்துவ முறைகளையும் பயன்படுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.