விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.;
நல்லம்பள்ளி:
தொப்பூர் அருகே கெட்டுப்பட்டி அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 50). இவர் விவசாய பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் முருகன் நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். முருகன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.