தொப்பூர் அருகே கார் மோதி தொழிலாளி சாவு

தொப்பூர் அருகே கார் மோதி தொழிலாளி பலியானார்.

Update: 2022-05-03 16:52 GMT
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே உள்ள பாகலஅள்ளி செட்டியூரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 72). தொழிலாளி. இவர் நேற்று சொந்தவேலையாக தாதநாய்க்கன்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வழியில் தொப்பூர் அருகே தொம்பரகாம்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு கிருஷ்ணன் பலத்த காயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்