கிருஷ்ணாபுரம் அருகே வங்கி ஊழியர் வீட்டில் திருட்டு முயற்சி

கிருஷ்ணாபுரம் அருகே வங்கி ஊழியர் வீட்டில் திருட்டு முயற்சி நடந்தது.

Update: 2022-05-03 16:52 GMT
தர்மபுரி:
கிருஷ்ணாபுரம் அருகே உள்ள லலிதானூர் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 35). வங்கி ஊழியர். இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில் மர்ம நபர்கள் இவர் வீட்டின் கதவை இரும்பு ராடால் உடைத்து, திருட முயன்றனர். அப்போது வளர்ப்பு நாய் தொடர்ந்து குரைத்ததால் வீட்டின் கதவை உடைக்கும் முயற்சியை கைவிட்ட மர்ம நபர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இதுதொடர்பாக மாதேஷ் கிருஷ்ணாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்