கோதண்டராமர் கோவிலில் கருடசேவை
அட்சய திருதியையொட்டி வடுவூர் கோதண்டராமர் கோவிலில் கருடசேவை நடந்தது.
வடுவூர்;
திருவாரூர் மாவட்டம், வடுவூர் கோதண்டராமர் கோவிலில் அட்சய திருதியை தினத்தையொட்டி கருடசேவை நடைபெற்றது. விழாவையொட்டி காலையில் உதய கருட சேவையும் மாலையில் அந்தி கருட சேவையும் நடத்தப்பட்டது. விழாவில் கோதண்டராமர் வில்லேந்திய திருக்கோலத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.