கிருஷ்ணகிரி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
கிருஷ்ணகிரி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.;
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே உள்ள துறிஞ்சிப்பட்டியை சேர்ந்தவர் தமிழரசி (வயது 28). இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று தமிழரசி விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழரசி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.