காப்பர் கம்பி திருடியவர் கைது

நெகமம் அருகே காப்பர் கம்பி திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-03 15:57 GMT
நெகமம்

கிணத்துக்கடவு ஒன்றியம் காட்டம்பட்டிபுதூரில் தனியாருக்கு சொந்தமான காற்றாலை உள்ளது. அங்கு, நேற்று காலை மர்ம நபர் ஒருவர் காப்பர் கம்பிகளை வெட்டி திருடிவிட்டு தப்ப முயன்றார். 

இதனைக்கண்ட ஊழியர்கள் அவரை கையும், களவுமாக பிடித்து நெகமம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த ஜீவானந்தம் (வயது 32) என்பதும்,

 தனியார் காற்றாலையில் இருந்து காப்பர் கம்பியை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். ஜீவானந்தம் கடந்த மாதம் சுல்தான்பேட்டை பகுதியில் காப்பர் கம்பி திருடி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்