சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

Update: 2022-05-03 15:48 GMT
வீரபாண்டி, 
 மங்கலம் 4 சாலை பிரிவு பகுதியைச் சேர்ந்த முகமது ஆசிப் என்பவரின் மகன் ரியாஸ் (வயது 23). பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து இரண்டு குழந்தையும் உள்ளது. இவர் 16வயது சிறுமியிடம் பழகியதால் அந்த சிறுமி 6 மாத கர்ப்பமானார்.  இதுகுறித்து  திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.  புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரித்து வந்தனர். இந்த நிலையில்  ரியாசை கைது செய்யக்கோரி  நேற்று திருப்பூர் மாவட்ட பா.ஜனதா தலைவர் செந்தில் வேல் தலைமையில் வீரபாண்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். இதையடுத்து   போக்சோ சட்டத்தில் ரியாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

மேலும் செய்திகள்