கோவை மாவட்டத்தில் 1 லட்சம் சிகரெட், பொம்மை வடிவ சாக்லெட் பறிமுதல் செய்யப்பட்டன

கோவை மாவட்டத்தில் 1 லட்சம் சிகரெட், பொம்மை வடிவ சாக்லெட் பறிமுதல் செய்யப்பட்டன

Update: 2022-05-03 15:30 GMT

கோவை

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஊசி வடிவிலான சாக்லெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று சரவணம் பட்டி, ராமநாதபுரம், குனியமுத்தூர், சிங்காநல்லூர், தாமஸ்வீதி, ரங்கே கவுடர் வீதி, ராஜவீதி, துடியலூர், மற்றும் 

புறநகர் பகுதிக ளான பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், சூலூர், கிணத்துக் கடவு, மதுக்கரை, அன்னூர் உள்பட பல்வேறு இடங்களில் 200-க்கும் மேற்பட்ட கடைகளில்  கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில் 100 கடைகளில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான 400 கிலோ சிகரெட் வடிவ சாக்லெட், பொம்மை மற்றும் வண்ண, வண்ண சாக்லெட், அளவுக்கு அதிகமான நிறம் மற்றும் காலாவதியான சாக்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இதில் 3 உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு உணவு பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டது. ஊசி வடிவ சாக்லெட்டுகள் எதுவும் பறிமுதல் செய்யப்பட வில்லை. 

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தரம் குறைந்த உணவு, சந்தேகப்படும்படியான சாக்லெட், கலப்பட தேயிலை தூள் உள்ளிட்டவை விற்பது தெரிய வந்தால் 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்