கூடலூரில் கண்காட்சி நடைபெறும் மைதானத்தில் கலெக்டர் ஆய்வு

கூடலூரில் கண்காட்சி நடைபெறும் மைதானத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2022-05-03 14:32 GMT
கூடலூர்

கூடலூர் பகுதியில் மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆய்வு செய்தார். அப்போது அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள அரசு மாணவியர் விடுதிக்கு சென்றார். அங்கு மாணவிகளுக்கு வழங்கப்படும் பொருட்களின் இருப்பை சரி பார்த்தார். அப்போது அங்கு சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்டு பார்த்தார். பின்னர் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக இருக்க வேண்டும் என உத்தரவிட்டார். தொடர்ந்து முதுமலையில் ஆதிவாசி மக்களுக்கு கட்டப்பட்டுவரும் தொகுப்பு வீடுகள் கட்டுமான பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  பின்னர் கூடலூரில் நடைபெற உள்ள வாசனை திரவிய கண்காட்சி மற்றும் கோடை விழா நடைபெறும் மார்னிங் ஸ்டார் மேல்நிலைப் பள்ளி மைதானத்திற்கு சென்றார். அங்கு கண்காட்சி அரங்குகள் வைப்பது குறித்து அலுவலர்களுடன் ஆலோசித்தார். கோடை விழாவுக்காக சட்டப்பிரிவு - 17 நிலத்தில் அமைக்கப்பட்ட புதிய சாலையை விழா முடிவடைந்தவுடன் மீண்டும் மூடி விடவேண்டும் என உத்தரவிட்டார். ஆய்வின்போது ஆர்.டி.ஓ. சரவண கண்ணன், தாசில்தார் சித்தராஜ், நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன், நகராட்சி தலைவர் பரிமளா, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் விஜயலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதரன், வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்