கிரிக்கெட் வீரர்களுக்கு இலவச பயிற்சி

கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு இலவச பயிற்சி நாளை மறுநாள் தொடங்குகிறது.

Update: 2022-05-03 14:06 GMT
கடலூர், 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான பயிற்சி முகாம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்குகிறது. கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடக்கும் இந்த பயிற்சி முகாம் காலை 6 மணி முதல் 8 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் நடைபெறுகிறது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பயிற்சியாளர் ஜெசுராஜ் பயிற்சி அளிக்கிறார்.
இதில் பங்குபெறும் வீரர்கள் 19 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். கிரிக்கெட் வீரர்கள் பயிற்சியின் போது வெள்ளை நிற உடையும், வெள்ளை நிற காலணியும் அணிந்து வர வேண்டும். இப்பயிற்சி கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் இலவசமாக அளிக்கப்படுகிறது. மேலும் வருகிற 15.6.2022 வரை நடக்கும் இந்த பயிற்சி முகாம், கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற உள்ளது. ஆகவே கடலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் கூத்தரசன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்