திருவள்ளூரில் 31 போலீஸ் ஏட்டுகளுக்கு பதவி உயர்வு- டி.ஐ.ஜி. எம்.சத்தியபிரியா உத்தரவு
திருவள்ளூரில்31 போலீஸ் ஏட்டுகளுக்கு பதவி உயர்வு அளித்து காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. எம்.சத்யபிரியா உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சீபுரம் போலீஸ் சரகத்தின் கீழ் காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் காஞ்சீபுரம் போலீஸ் சரகத்தில் காஞ்சீபுரத்தில் 30 போலீஸ் ஏட்டுகள், செங்கல்பட்டில் 32 போலீஸ் ஏட்டுகள், திருவள்ளூரில்31 போலீஸ் ஏட்டுகள் என 93 போலீசார் கடந்த 25 வருடங்களாக பணிபுரிந்து வந்தனர். கடந்த 10 ஆண்டுகளாக போலீஸ் ஏட்டுகளாக பணி புரிந்தவர்களுக்கு பதவி உயர்வு அளிக்க திட்டமிடப்பட்டது.
இந்தநிலையில் காஞ்சீபுரத்தை சேர்ந்த 29 பேர், செங்கல்பட்டில் 28 பேர், திருவள்ளூரில் 27 பேர் என 84 போலீஸ் ஏட்டுகள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு அளித்து காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. எம்.சத்யபிரியா உத்தரவிட்டுள்ளார். விடுபட்ட 9 ஏட்டுகளுக்கும் புகார் நிறைவு பெற்றதும் பதவி உயர்வு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.