ஆக்கி லீக் போட்டி - கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில கூறியிருப்பதாவது:-;
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு பிரிவின் சார்பாக மாவட்ட அளவிலான ஆக்கி லீக் போட்டி வரும் 7-ந் தேதியன்று காலை 9 மணிக்கு காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. ஆண்களுக்கான இந்த போட்டியில் வயது வரம்பு கிடையாது, போட்டிகள் அனைத்தும் லீக் முறையில் நடத்தப்படும்.
இப்போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் வருகிற 6-ந் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரம் பெற 7401703481 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மாவட்ட அளவில் வெற்றி பெறும் அணிகள் மண்டலப் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.