அண்ணாநகர் துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்தது
அண்ணாநகர் துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்தது.
சென்னை,
சென்னை டி.பி. சத்திரம் நியூ ஆவடி சாலையில் அண்ணாநகர் துணை மின் நிலையம் அமைந்துள்ளது. நேற்று மாலை துணை மின் நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த அண்ணாநகர் மற்றும் கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள், டிரான்ஸ்பார்மரில் எரிந்த தீயை உடனடியாக அணைத்தனர்.