மாம்பழங்களை பழுக்க வைக்க அரசு விதிமுறைகளை வகுத்துத்தர வேண்டும் - பழ வியாபாரிகள் வலியுறுத்தல்

மாம்பழங்களை பழுக்க வைக்க அரசு விதிமுறைகளை வகுத்துத்தர வேண்டும் என்று பழ வியாபாரிகள் வலியுறுத்தல் உள்ளனர்.

Update: 2022-05-03 04:02 GMT
சென்னை,  

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கார்பைடு கற்கள் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்படுவது தொடர் கதையாக இருக்கிறது. இதனை தடுக்க அரசு உரிய வழிமுறைகளை வகுத்துத்தர வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து சென்னை கோயம்பேடு மார்க்கெட் பழக்கமிஷன் ஏஜெண்டுகள் சங்க தலைவர் சீனிவாசன் கூறியதாவது:-

‘டன்’ கணக்கில் விளைவிக்கப்படும், பறிக்கப்படும் மாங்காய்கள் உடனடியாக பழுப்பது கிடையாது. இதனால் அண்டை மாநிலங்களில் எத்தனால் கொண்டு காய்கள் பழுக்க வைக்கப்படுகின்றன. தற்போது அதுவே பாக்கெட்டுகளில் அடைத்து பயன்படுத்தப்படுகிறது. ஆனால் முறையான வழிமுறைகள் தெரியாமல் வியாபாரிகள் பழங்களின் மீது வைத்து அதை பயன்படுத்துகிறார்கள். இது தவறுதான்.

எனவே அரசு எத்தனாலை கொண்டு எப்படி மாம்பழங்களை பழுக்க வைப்பது? எவ்வளவு அளவில் இதை பயன்படுத்தலாம்? என்பதை சொல்லிக்கொடுக்கும் விதமாக ஒரு குழுவை ஏற்படுத்திட வேண்டும். அந்த குழுவில் மாநகராட்சி, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இடம்பெற வேண்டும். அவர்கள் வியாபாரிகளுக்கு மாம்பழங்கள் பழுக்க வைப்பது குறித்த வழிமுறைகளை சொல்லித்தர வேண்டும். இதை அரசுக்கு ஒரு வேண்டுகோளாக வைக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்