சென்னை மெட்ரோ ரெயிலில் ஏப்ரல் மாதம் மட்டும் 44½ லட்சம் பேர் பயணம்

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

Update: 2022-05-03 03:44 GMT
சென்னை, 

சென்னை மெட்ரோ ரெயிலில் நாளுக்கு நாள் பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 25 லட்சத்து 19 ஆயிரத்து 252 பேரும், பிப்ரவரி மாதத்தில் 31 லட்சத்து 86 ஆயிரத்து 653 பேரும், மார்ச் மாதத்தில் 44 லட்சத்து 67 ஆயிரத்து 756 பேரும் பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 44 லட்சத்து 46 ஆயிரத்து 330 பேர் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தி உள்ளனர். இதில் அதிகபட்சமாக கடந்த மாதம் 25-ந்தேதி 1 லட்சத்து 74 ஆயிரத்து 475 பேர் பயணம் செய்து உள்ளனர்.

இதில் கடந்த மாதம் மட்டும் ‘கியூ.ஆர்.’ வசதி மற்றும் பயண அட்டை வசதி மூலம் 35 லட்சத்து 25 ஆயிரத்து 433 பேர் டிக்கெட் பெற்று பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்