எடப்பாடி:
கொங்கணாபுரம் அருகே கோரணம்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி மோகனப்பிரியா (வயது 28) இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மோகனப்பிரியா தனது கணவர் சுரேஷிடம் தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறியுள்ளார். இதற்கு சுரேஷ் மறுத்ததால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மோகனப்பிரியா வீட்டின் அருகில் உள்ள கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கொங்கணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.