தற்கொலைக்கு முயன்ற மாணவிக்கு சிகிச்சை

தற்கொலைக்கு முயன்ற மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2022-05-02 22:39 GMT
சேலம்:
சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் தீபிகா (வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். விரைவில் பொதுத்தேர்வு வர இருப்பதால் நன்றாக படிக்க வேண்டும் என பெற்றோர் கூறி கண்டித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த மாணவி தீபிகா நேற்று முன்தினம் வீட்டில் தூக்கில் தொங்கினார். இதனை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்