தடுப்பு சுவரில் மோதி வேன் கவிழ்ந்தது-6 பேர் காயம்
தடுப்பு சுவரில் மோதி வேன் கவிழ்ந்ததில் 6 பேர் காயம் அடைந்தனர்.;
சேலம்:
தர்மபுரி மாவட்டம் நாகரசம்பட்டியை சேர்ந்தவர் மாதையன். இவருடைய மகன் ஜெயசந்திரன் (வயது 26). அதே பகுதியை சேர்ந்தவர்கள் கண்ணாயிரம் மகன் ரஞ்சித்குமார் (27), பெருமாள் மகன் சூர்யபிரகாசம் (42), கிருஷ்ணன் மகன் பூபதி (26), சுந்தரம் மகன் பிரபாகரன் (28), ரமேஷ் மகன் குமரேசன் (24). இவர்கள் 6 பேரும் ஒரு வேனில் தர்மபுரியில் இருந்து மதுரைக்கு சென்றனர். பின்னர் சொந்த ஊர் செல்வதற்காக 6 பேரும் வேனில் திரும்ப வந்து கொண்டிருந்தனர். வேனை பிரபாகரன் ஓட்டினார். நேற்று முன்தினம் நள்ளிரவு சேலம் திருவாக்கவுண்டனூர் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் தாறுமாறாக ஓடி மேம்பால தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த 6 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம்பட்டவர்களை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.