பவானி அருகே சூறாவளியுடன் மழை: மரம் விழுந்து 3 வீடுகள் சேதம்
பவானி அருகே சூறாவளியுடன் மழை: மரம் விழுந்து 3 வீடுகள் சேதம்;
பவானி
பவானியில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை பலத்த காற்று வீசியது. மாலையில் கருமேகங்கள் சூழ்ந்தது. இரவு 7 மணி அளவில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1½ மணி நேரம் நிற்காமல் மழை பெய்தது.
அப்போது பவானி ஒரிச்சேரியில் பஸ் நிறுத்தம் அருகே, சுமார் 40 ஆண்டு பழமையான வேப்பமரம் ஒன்று திடீரென வேரோடு அருகே இருந்து வீடுகளின் மீது விழுந்தது. இதில் அர்த்தனாரி, லட்சுமி, செங்கோடன் ஆகியோரின் வீடுகள் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக வீடுகளுக்குள் இருந்தவர்களுக்கு எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.