மணல் கடத்தி வந்த சரக்கு ஆட்டோ பறிமுதல்

மணல் கடத்தி வந்த சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது;

Update: 2022-05-02 21:31 GMT
அம்மாப்பேட்டை
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது  புத்தூர் மெயின் ரோடு வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை நிறுத்த சைகை காட்டினர். போலீசாரை கண்டதும் அதனை ஓட்டி வந்தவர் சரக்கு ஆட்டோவை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். போலீசார் அந்த சரக்கு ஆட்டோவில் சோதனையிட்டதில், அம்மாப்பேட்டை பகுதி வெண்ணாற்றிலிருந்து மணல் அள்ளி கடத்தி வந்தது தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து போலீசார் அந்த சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த வலங்கைமான் தாலுகா, மணக்கால் கிராமம், இந்திரா நகரை சேர்ந்த கருணாநிதியின் மகன் மதன் என்கின்ற மதனேசன் என்பவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்