ரெயிலில் அடிபட்டு இறந்த பெண்ணின் உடல் அடையாளம் தெரிந்தது

பாபநாசம் அருகே ரெயிலில் அடிபட்டு இறந்த பெண்ணின் உடல் அடையாளம் தெரிந்தது

Update: 2022-05-02 21:23 GMT
பாபநாசம்
பாபநாசம் அருகே பசுபதிகோவில் ரயில் நிலையம் அருகே 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நேற்று முன்தினம் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக சென்ற ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். அவரது உடலை தஞ்சாவூர் இருப்புப்பாதை ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவவடிவேல், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் ஆகியோர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அந்த பெண் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தினர். இந்தநிலையில் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்த பெண், அரியலூர் ஸ்ரீபுரந்தான் புதுப்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்த செல்வராஜ் மனைவி சாந்தா (வயது 58) என்பது நேற்று தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு பிறகு சாந்தாவின் உடல் செல்வராஜ் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்