கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி மயங்கி விழுந்து சாவு
மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி மயங்கி விழுந்து இறந்தார்.;
மதுரை,
விருதுநகர் மாவட்டம் எம்.ரெட்டியபட்டியை சேர்ந்தவர் எம்.என்.எஸ். வெங்கட்ராமன் (வயது 66). மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர். சம்பவத்தன்று இவர் தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற மே தின விழா பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பின்னர் இரவு ஊர் திரும்புவதற்காக பஸ்சில் மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்திற்கு நள்ளிரவு 12 மணிக்கு வந்தார். அப்போது அவருக்கு திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டதை உணர்ந்தார். பின்னர் அருகில் உள்ள கடைக்கு டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென்று அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது வெங்கட்ராமன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதை தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது.