3 மணி நேரம் சிறப்பு குழு விசாரணை
மதுரை மருத்துவ கல்லூரி விவகாரத்தில் 3 மணி நேரம் சிறப்பு குழு விசாரணை நடத்தியது.
மதுரை,
மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் சர்ச்சையான உறுதிமொழி விவகாரம் குறித்து, துறை ரீதியாக மருத்துவ கல்வி இயக்குனர் தலைமையில் விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னையில் இருந்து மருத்துவ கல்வி இயக்குனரகத்தை சேர்ந்த சிறப்பு குழு ஒன்று மதுரை மருத்துவ கல்லூரிக்கு வந்தது. அந்த குழுவினர் வரவேற்பு விழாவில் சர்ச்சையான விவகாரம் குறித்து, தற்போதைய பொறுப்பு டீன் தனலட்சுமி, மருத்துவ கல்லூரியில் செயல்பட்டு வரும் ஆலோசனை குழு கூட்ட உறுப்பினர்கள், மாணவர் பேரவை நிர்வாகிகள், மாணவர்கள் என பலரிடம் தனி அறையில் வைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையானது, சுமார் 3 மணி நேரம் நீடித்தது. அவர்கள் அளித்த பதில்களை, எழுத்துப்பூர்வமாக மருத்துவ கல்வி இயக்குனருக்கு தெரிவிக்கப்படும் என அந்த குழு தெரிவித்தது.