ஆட்டோவுக்கு தீ வைப்பு; ரவுடி உள்பட 3 பேர் கைது

செங்கோட்டையில் ஆட்டோவுக்கு தீ வைத்த ரவுடி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-02 20:50 GMT
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே வல்லம் சந்தன மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்தையா. இவருடைய மகன் சுடலை (வயது 36). இவர் சொந்தமாக ஆட்டோ வாங்கி வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் சுபாஷ் கண்ணனுக்கும் (23) இடையே முன்விரோதம் இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுடலை தனது வீட்டின் அருகில் ஆட்டோவை நிறுத்தி இருந்தார். நள்ளிரவில் அவரது ஆட்டோவில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. உடனே சுடலை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். 

இதுகுறித்த புகாரின்பேரில், செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சுடலையின் ஆட்டோவுக்கு சுபாஷ் கண்ணன் மற்றும் 2 சிறுவர்கள் தீ வைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான சுபாஷ் கண்ணன் மீது செங்கோட்டை, குற்றாலம் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதாவும், அவரது பெயர் ரவுடி பட்டியலில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்