விழிப்புணர்வு செயல் விளக்கம்

தீத்தடுப்பு விழிப்புணர்வு செயல் விளக்கம் நடந்தது.

Update: 2022-05-02 20:36 GMT
உடையார்பாளையம்:
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதன் எதிரொலியாக, அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் சார்பில் த.பொட்டக்கொல்லை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நடந்தது. இதில் டாக்டர்கள், செவிலியர்கள், அலுவலக உதவியாளர்கள், காவலாளிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான வீரர்கள், தீத்தடுப்பு பற்றிய செயல்முறை விளக்கத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் செய்திகள்