டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து பீர் பாட்டில்கள் திருட்டு

டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து பீர் பாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

Update: 2022-05-02 20:33 GMT
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூரில் உள்ள டாஸ்மாக் கடை, நேற்று முன்தினம் தொழிலாளர் தின விடுமுறையால் அடைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று மதியம் டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு(ஷட்டர்) திறந்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர், விற்பனையாளர்களுடன் சென்று பார்வையிட்டனர். அப்போது அந்த கடையில் 10 பீர் பாட்டில்கள் மட்டும் திருட்டு போயிருந்தது, தெரியவந்தது. இதையடுத்து அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டு, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்