கடல்வாழ் உயிரினத்தின் படிமம் கண்டெடுப்பு

கடல்வாழ் உயிரினத்தின் படிமம் கண்டெடுக்கப்பட்டது.

Update: 2022-05-02 20:33 GMT
பெரம்பலூர்:
திருச்சி தனியார் கல்லூரியில் இளநிலை மண்ணியல் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவ-மாணவிகள் 40 பேரும், 3 பேராசிரியர்களும் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, கூத்தூர் ஆற்றுப்படுகையில் ஒரு நாள் கள ஆய்வுக்காக வந்தனர். அப்போது அவர்கள் கூத்தூர் பகுதியில் படிமங்கள் புதைவிடங்களை கள ஆய்வு மேற்கொண்டதில் 125 முதல் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தை சேர்ந்த கடல்வாழ் உயிரினத்தின் படிமத்தை கண்டெடுத்தனர். 
தலைக்காலி என்று அழைக்கப்பட்ட அந்த உயிரினம் தலையை பயன்படுத்தி ஊர்ந்து செல்லும் தன்மையை கொண்டது என்றும், இந்த படிமம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் பேராசிரியர்கள் தெரிவித்தனர். மேலும் மாணவ-மாணவிகள் அந்த படிமத்தை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்