நெல்லை அருகே விபத்தில் தனியார் நிறுவன அதிகாரி சாவு
நெல்லை அருகே நடந்த விபத்தில் தனியார் நிறுவன அதிகாரி பரிதாபமாக இறந்தார்.
நெல்லை:
அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் சோனு (வயது 26). இவர் நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருடைய தம்பி புல்சன் அதே நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.
நேற்று அதிகாலை 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் மான் பூங்கா அருகே சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை புல்சன் ஓட்டினார். அப்போது அந்த பகுதியில் வந்த லாரி எதிர்பாராதவிதமாக அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சோனு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். புல்சன் காயமடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புல்சனை மீட்டு சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சோனு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.