தம்பதியை தாக்கிய தாய்-மகன் மீது வழக்கு

தம்பதியை தாக்கிய தாய்-மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-05-02 20:29 GMT
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள ஸ்ரீபுரந்தான் லட்சுமணன்காடு பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ்(வயது 31). அதே பகுதியை சேர்ந்தவர் பாலுச்சாமி(30). இவர்களது குடும்பத்தினரிடையே முன் விரோதம் இருந்து வந்துள்ள நிலையில் சம்பவத்தன்று பாலுச்சாமியின் ஆடுகள் தர்மராஜின் வீட்டுத் தோட்டத்தில் புகுந்து செடி, கொடிகளை மேய்ந்து விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தர்மராஜ், பாலுச்சாமியிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாலுச்சாமி மற்றும் அவரது தாய் இளஞ்சியம் ஆகியோர் சேர்ந்து தர்மராஜ் மற்றும் அவரது மனைவி மாலா ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த தர்மராஜ் மற்றும் மாலா ஆகியோர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் தர்மராஜ் கொடுத்த புகாரின்பேரில் பாலுச்சாமி, இளஞ்சியம் ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்