ஸ்ரீநிவாச கோபால மகாதேசிகன் சுவாமிகள் சிறப்பு வழிபாடு

ஸ்ரீநிவாச கோபால மகாதேசிகன் சுவாமிகள் சிறப்பு வழிபாடு

Update: 2022-05-02 20:10 GMT
ஸ்ரீரங்கம், ேம.3 -
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு ஸ்ரீரங்கம் பரமஹம்ஸேத்யாதி பவுண்டரீகபுரம் ஸ்ரீ மத் பறவாக்கோட்டை சின்ன ஆண்டவன் ஸ்ரீநிவாச கோபால மகாதேசிகன் சுவாமிகள் மங்களாசாசனம் எனப்படும் சிறப்பு வழிபாட்டிற்கு நேற்று வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன். சுந்தர் பட்டர் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். பின்னர் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அதன்பின் அவர் கருடாழ்வார், மூலவர் ரெங்கநாதர், தாயார், சக்கரத்தாழ்வார், ராமானுஜர் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

மேலும் செய்திகள்