பிளஸ்-2 பொதுத்தேர்வை 33,121 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்

திருச்சி மாவட்டத்தில் 5-ந் தேதி தொடங்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வை 33 ஆயிரத்து 121 மாணவ- மாணவிகள் எழுதுகிறார்கள்.

Update: 2022-05-02 20:05 GMT
திருச்சி, மே.3-
திருச்சி மாவட்டத்தில் 5-ந் தேதி தொடங்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வை 33 ஆயிரத்து 121 மாணவ- மாணவிகள் எழுதுகிறார்கள்.
பொதுத்தேர்வுகள்
தமிழகத்தில் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் (பிளஸ்-2) வருகிற 5-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரையிலும், மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் (பிளஸ்-1) வருகிற 10-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி வரையிலும், 10-ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) பொதுத் தேர்வுகள் வருகிற 6-ந் தேதி தொடங்கி30-ந்தேதிவரையிலும்நடைபெறவுள்ளது.திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வினை 15,522 மாணவர்களும், 17,599 மாணவிகளும் என மொத்தம் 33 ஆயிரத்து 121 பேர் எழுதவுள்ளனர்.
பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி.
பிளஸ்-1 பொதுத்தேர்வினை 16 ஆயிரத்து 811 மாணவர்களும், 17 ஆயிரத்து 605 மாணவிகளும் என மொத்தம் 34 ஆயிரத்து 416 பேர் எழுதவுள்ளனர். இவர்கள் 126 தேர்வு மையங்களில் தேர்வு எழுதவுள்ளனர். இத்தேர்வு நடத்துவதற்கு 126 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களும், 126 துறை அலுவலர்களும், 2,134 அறை கண்காணிப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வினை 17 ஆயிரத்து 713 மாணவர்களும், 17,540 மாணவிகளும் என மொத்தம் 35 ஆயிரத்து 253 பேர் எழுதவுள்ளனர். இவர்கள் 165 தேர்வு மையங்களில் தேர்வு எழுதவுள்ளனர். இத்தேர்வு நடத்துவதற்கு 165 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களும், 165 துறை அலுவலர்களும், 2 ஆயிரத்து 99 அறை கண்காணிப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தனி தேர்வர்கள்
மேலும்,தனித்தேர்வர்கள்பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வினை 4 மையங்களிலும், எஸ்.எஸ்.எல்.சி.பொதுத்தேர்வினை 5 மையங்களிலும் எழுதவுள்ளனர்.மத்திய சிறைச்சாலையில் ஒருமையத்தில் சிறைக்கைதிகள் தேர்வு எழுதவுள்ளனர். தேர்வு நடைபெறும் மையங்களில் முறைகேடுகளை தடுப்பதற்கு 270ஆசிரியர்கள்நிலையானபறக்கும்படைஉறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தேர்வு நடைபெறும் நேரம் முழுவதும் மையத்திலேயே தங்கியிருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகள் தன்னம்பிக்கையுடன் நன்முறையில் தேர்வினை எதிர்கொண்டு அதிக மதிப்பெண் பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்