மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஸ்ரீமுஷ்ணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஸ்ரீமுஷ்ணம்
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாத்தாவட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு நகர பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.
வட்டக்குழு உறுப்பினர்கள் வெற்றிவீரன், தினேஷ்பாபு, ஆதிமூலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டக் குழு உறுப்பினர் பிரகாஷ் கோரிக்கை பற்றி விளக்கி பேசினார். இதில் பாலு, பெருமாள், சுரேஷ், அம்பலவாணன், செல்வம், தமிழ்மணி, சரஸ்வதி, ஜான்சிராணி, நிர்மலா, மீரா உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து தாசில்தாரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர்.