அரசு ஆஸ்பத்திரி ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு
அரசு ஆஸ்பத்திரி ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
விருதுநகர்,
அரசு ஆஸ்பத்திரி ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
கலெக்டர் அலுவலகம் முற்றுகை
சிவகாசி,அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய அரசு துறைகளில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றுவோர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் 240 பேர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறோம். பல்வேறு பணிகளை செய்து வரும் எங்களுக்கு ஒப்பந்தக்காரர்கள் அரசு நிர்ணயித்த சம்பளம் வழங்கப்படாத நிலையில் எங்களுக்கு பணி பாதுகாப்பும் இல்லாத நிலை உள்ளது. எனவே எங்களுக்கு அரசு நிர்ணயித்த சம்பளம் வழங்கவும், வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க பணி பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.