விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நடந்தது.
விருத்தாசலம்,
கத்தார் ஆம்பல் சங்கம் மற்றும் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் இணைந்து நடத்தும் புத்தக வாசிப்பு அடிப்படையிலான உலக சாதனை முன்னெடுப்பு நிகழ்ச்சி விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் நடைபெற்றது.
வாசிப்பு திறனை மேம்படுத்தும் இந்த நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் ராஜவேல் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தமிழ்த்துறை பேராசிரியர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். பேராசிரியர் சண்முகம் வரவேற்றார். இதையடுத்து 650 மாணவ-மாணவிகள் தமிழ் மற்றும் ஆங்கில பாட நூல், இலக்கிய நூல், இலக்கணம், அரசியல், பொது அறிவு, வரலாறு உள்ளிட்ட பல்வேறு நூல்களை வாசித்தனர்.
இதுகுறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், செல்போன், சமூக வலைதளங்களின் ஆதிக்கம், கொரோனா காலகட்ட இணையவழிக்கல்வி என பொதுமக்கள், இளம் தலைமுறையினர், மாணவர்களிடையே வாசிப்புத்திறன் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. அதனால் வாசிப்பு திறனை மேம்படுத்தும் நோக்கில் 2 மணி நேரம் இடைவிடாத புத்தகம் வாசிப்பு நிகழ்ச்சி நடந்தது.
மேலும் உலக சாதனைக்கான முன்னெடுப்பு நிகழ்ச்சிக்காக கொளஞ்சியப்பர் கல்லூரி உள்பட உலகம் முழுவதும் உள்ள 64 நாடுகளில் இருக்கும் பல்வேறு கல்லூரிகள், மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், வாசிப்பு ஆர்வம் உடையோர் என பல்வேறு தரப்பினருக்கும் ஒரே நேரத்தில் இந்த புத்தகம் வாசிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது என்றனர். டைபெறுகிறது, என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். முடிவில் கல்லூரி ஆசிரியர் மன்ற செயலாளர் மகேஷ் நன்றி கூறினார்.