ரூ.3½ கோடியில் திட்டப்பணிகள்; மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம்

ரூ.3½ கோடியில் திட்டப்பணிகளை மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Update: 2022-05-02 19:29 GMT
சிவகங்கை, 
சிவகங்கை மாவட்ட ஊராட்சி கூட்டம் மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்மணி பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி செயலாளர் பழனிச்சாமி வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் துணைத்தலைவர் சரஸ்வதி அண்ணாதுரை. மாவட்ட கவுன்சிலர்கள் செந்தில்குமார், கொத்தங்குளம் கருப்பையா, ராமசாமி, மாரிமுத்து, உள்பட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 6 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. 
இதில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூ.3 கோடியே 55 லட்சம் மதிப்பில் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்துவது என்பது உள்பட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொது நிதி மூலம் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்மணி பாஸ்கரன் கூறும்போது, பொது நிதியை பயன்படுத்தி தங்கள் பகுதியில் செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து மாவட்ட கவுன்சிலர்கள் எதுவும் தெரிவிக்காததால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றுவதற்கு உரிய வகையில் விரைவில் திட்டப்பணிகள் குறித்து தெரிவிக்கும்படி மாவட்ட கவுன்சிலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் செய்திகள்