ரேஷன் பொருட்களை கடத்திய 3 பேர் கைது
விருதுநகரில் ரேஷன் பொருட்களை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்,
ரேஷன் பொருட்களை கடத்திய 3 ேபரை போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனை
விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மல்லாங்கிணறு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சூரம்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி (வயது 39) என்பவர் இரு சக்கர வாகனத்தில் 30 கிலோ ரேஷன் கோதுமையை கடத்தியதை கண்டறிந்தனர். ரேஷன் கோதுமையை வாகனத்துடன் பறிமுதல் செய்து அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
அதேபோல வரலொட்டியை சேர்ந்த ராமையா என்ற கண்ணன் (25) என்பவரும் இருசக்கர வாகனத்தில் 30 கிலோ ரேஷன் கோதுமையை கடத்தியபோது வாகனத்துடன் கோதுமையை பறிமுதல் செய்த போலீசார் அவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ரேஷன் அரிசி பறிமுதல்
விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்த சக்தீஸ்வரன் (39) என்பவர் 95 கிலோ ரேஷன் அரிசியை இருசக்கர வாகனத்தில் கடத்திய போது வாகனத்துடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.