10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
விருதுநகரில் 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விருதுநகர்,
விருதுநகர் நகரப்பகுதியில் நகராட்சி கமிஷனர் சையது முஸ்தபா கமால் உத்தரவுப்படி சுகாதார ஆய்வாளர்கள் செந்தில் ஆண்டவர், சீனிவாசன், சாந்தி மீனா மற்றும் களப்பணியாளர்கள் வணிக வீதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து சோதனை நடத்தினர். அப்போது 60 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 10 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 15 கடைகளுக்கு ரூ.4,300 அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து பிற பகுதிகளிலும் ேசாதனை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.