வாகனம் மோதி ஒருவர் பலி
உளுந்தூர்பேட்டை அருகே வாகனம் மோதியதில் ஒருவர் பலியானார்.;
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே சேந்தமங்கலம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரத்த காயங்களுடன் பிணமாக கிடப்பதாக திருநாவலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணமாக கிடந்தவரை பார்வையிட்டு, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது தெரியவந்தது.
மேலும் விபத்தில் பலியான அந்த நபரின் மார்பு பகுதியில் வாசுகி என பச்சை குத்தப்பட்டிருந்தது. ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. இதையடுத்து விபத்தில் பலியான நபரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.