கிராமசபை கூட்டத்தில் தகராறு; 2 பேர் மீது வழக்கு
ஆசனூரில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ஏற்பட்ட தகராறில் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் கிராமத்தில் நேற்று முன்தினம் மேதினத்தையொட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட அதே ஊரைச் சேர்ந்த வீராசாமி மற்றும் அழகேசன் ஆகியோர் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜபாரதி எடைக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வீராசாமி, அழகேசன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.