ரம்ஜான் சிறப்பு தொழுகை
மஸ்ஜித் தவ்பா சார்பில் நெல்லை மேலப்பாளையத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.
நெல்லை:
மஸ்ஜித் தவ்பா சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நெல்லை மேலப்பாளையம் பஜார் திடலில் நேற்று நடைபெற்றது. மவ்லவி முகம்மது உசைன் மன்பயி கலந்து கொண்டு சிறப்பு தொழுகையை நடத்தி, சொற்பொழிவு ஆற்றினார். இதில் மஸ்ஜித் தவ்பா செயலாளர் மன்சூர், மஸ்ஜித் தவ்பா தலைவர் இனயத்துல்லா மற்றும் திரளான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். சிறப்பு தொழுகைக்கான ஏற்பாடுகளை மஸ்ஜித் தவ்பா நிர்வாகிகள் செய்திருந்தனர்.