அனவயல் தாணான்டியம்மன் கோவில் தேரோட்டம்
அனவயல் தாணான்டியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
வடகாடு:
வடகாடு அருகே அனவயல் தாணான்டியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதையடுத்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேராேட்டம் நேற்று நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் தாணான்டியம்மன் தேரில் எழுந்தருளினார். தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவில் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.